குரங்கு(கலை, மந்தி, முசு, கடுவன்) |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை; |
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
உரை |
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் |
|
கோடை அவ் வளி குழலிசை ஆக, |
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை |
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, |
|
5 |
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, |
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, |
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, |
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க, |
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் |
|
10 |
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் |
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, |
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், |
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, |
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் |
|
15 |
பலர்தில், வாழி தோழி! அவருள், |
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, |
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல், |
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? |
|
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் | |
உரை |
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் |
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல் |
|
5 |
வாரல் வாழியர், ஐய! நேர் இறை |
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் |
|
காவல் கண்ணினம் தினையே; நாளை |
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் |
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், |
|
10 |
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, |
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் |
|
திருமணி விளக்கின் பெறுகுவை |
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
|
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் | |
உரை |
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் |
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள், |
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் |
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் |
|
5 |
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு |
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, |
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து |
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு |
|
10 |
தான் வரும் என்ப, தட மென் தோளி |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட |
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை |
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து |
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண், |
|
15 |
கரு முக முசுவின் கானத்தானே. |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
|
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் |
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, |
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை |
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், |
|
5 |
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் |
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து |
|
10 |
ஆராக் காதலொடு தார் இடை குழைய, |
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, |
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை, |
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, |
|
15 |
பெரு பெயற்கு உருகியாஅங்கு, |
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'துனி இன்று இயைந்த துவரா நட்பின் |
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது |
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், |
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய |
|
5 |
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை |
மூங்கில் இள முளை திரங்க, காம்பின் |
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து |
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, |
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, |
|
10 |
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை |
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை |
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் |
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் |
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் |
|
15 |
செம் முக மந்தி ஆடும் |
நல் மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, |
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, |
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி, |
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, |
|
5 |
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, |
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை, |
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ |
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர, |
|
மை பட்டன்ன மா முக முசுவினம் |
|
10 |
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென |
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய், |
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் |
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் |
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும் |
|
15 |
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை |
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த, |
|
தோளே தோழி! தவறு உடையவ்வே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை |
|
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை, |
|
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ |
|
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை, |
|
5 |
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், |
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்! |
|
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின், |
|
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் |
|
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து, |
|
10 |
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி |
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க் |
|
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர், |
|
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும், |
|
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து, |
|
15 |
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் |
கொந்தொடு உதிர்த்த கதுப்பின், |
|
அம் தீம் கிளவித் தந்தை காப்பே. |
|
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
|
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
உரை |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் | |
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
உரை |
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப; |
|
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்; |
|
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி, |
|
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் |
|
5 |
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, |
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத் |
|
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு |
|
அறியக் கூறல் வேண்டும் தோழி! |
|
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி |
|
10 |
செழுங் கோட் பலவின் பழம் புணையாக, |
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் |
|
வறன் உறல் அறியாச் சோலை, |
|
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே! |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் |
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, |
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், |
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன் |
|
5 |
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, |
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; |
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, |
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, |
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் |
|
10 |
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; |
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, |
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, |
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, |
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் |
|
15 |
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, |
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் |
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, |
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் |
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |