செந்நாய் |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
அறியாய், வாழி தோழி! இருள் அற |
|
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் |
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, |
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், |
|
5 |
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு |
|
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் |
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை |
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், |
|
10 |
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் |
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் |
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், |
|
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் |
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் |
|
15 |
பொருளே காதலர் காதல்; |
'அருளே காதலர்' என்றி, நீயே. |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
|
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
|
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
|
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, |
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், |
|
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப் |
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் |
|
5 |
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, |
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், |
|
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி, |
|
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் |
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் |
|
10 |
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என, |
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் |
|
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் |
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் |
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல், |
|
15 |
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் |
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, |
|
மடத் தகை மெலியச் சாஅய், |
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம் |
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து |
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று |
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், |
|
5 |
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை |
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி |
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன |
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை |
|
10 |
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை |
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் |
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு |
|
வரூஉம் என்றனரே, காதலர்; |
|
15 |
வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
மேல் |