நண்டு(ஞெண்டு, களவன், அலவன்) |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, |
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, |
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, |
|
5 |
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் |
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, |
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின் |
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, |
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் |
|
10 |
பல் பூங் கானல் அல்கினம் வருதல் |
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், |
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை |
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை, |
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென |
|
15 |
வலவன் ஆய்ந்த வண் பரி |
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே. |
|
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
|
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
|
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
|
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
|
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
|
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் - பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
|
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
|
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
|
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப் |
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள், |
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி |
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள், |
|
5 |
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், |
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து, |
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு |
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும், |
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும், |
|
10 |
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், |
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக் |
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த் |
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் |
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே? |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார் | |
உரை |
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, |
|
எறி திரை ஓதம் தரல் ஆனாதே; |
|
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் |
|
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப, |
|
5 |
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; |
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி |
|
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது, |
|
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் |
|
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப! |
|
10 |
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, |
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் |
|
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, |
|
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் |
|
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், |
|
15 |
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார் | |
உரை |
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும் |
|
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி, |
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை, |
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த |
|
5 |
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், |
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் |
|
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என, |
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; |
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; |
|
10 |
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது |
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; |
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? |
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |