நாய்(ஞமலி) |
மெய்யின் தீரா மேவரு காமமொடு |
|
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி! |
|
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே |
|
அருவி ஆன்ற பைங் கால் தோறும் |
|
5 |
இருவி தோன்றின பலவே. நீயே, |
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி, |
|
பரியல் நாயொடு பல் மலைப் படரும் |
|
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின் |
|
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து, |
|
10 |
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி, |
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை, |
|
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என, |
|
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின், |
|
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி | |
உரை |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், |
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி, |
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, |
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, |
|
5 |
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, |
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் |
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய |
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் |
|
10 |
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் |
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் |
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; |
|
அளியள்தான், நின் அளி அலது இலளே! |
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர் | |
உரை |
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் |
|
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்; |
|
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின், |
|
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்; |
|
5 |
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், |
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்; |
|
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று |
|
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்; |
|
அர வாய் ஞமலி மகிழாது மடியின், |
|
10 |
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் |
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே; |
|
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின், |
|
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை |
|
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்; |
|
15 |
வளைக்கண் சேவல் வாளாது மடியின், |
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்; |
|
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள் |
|
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால், | |
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து, |
|
20 |
ஆதி போகிய பாய்பரி நன் மா |
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் |
|
கல் முதிர் புறங்காட்டு அன்ன |
|
பல் முட்டின்றால் தோழி! நம் களவே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர் | |
உரை |
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் |
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த |
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
என்றூழ் விடர குன்றம் போகும் |
|
5 |
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் |
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, |
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் |
|
சேரி விலைமாறு கூறலின், மனைய |
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய |
|
10 |
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, |
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் |
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு |
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை |
|
கை பூண் பகட்டின் வருந்தி, |
|
15 |
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் | |
உரை |
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, |
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், |
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, |
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், |
|
5 |
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் |
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து |
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; |
|
10 |
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் |
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர |
|
மன்ற மராஅத்த கூகை குழறினும், |
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் |
|
15 |
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் |
|
எந்தையும் இல்லன் ஆக, |
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, |
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, |
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் |
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி, |
|
5 |
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
வேட்டம் போகிய குறவன் காட்ட |
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, |
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! |
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து |
|
10 |
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், |
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், |
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய |
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, |
|
15 |
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் |
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும் |
|
பெரு வரை நண்ணிய சாரலானே. |
|
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர் | |
உரை |
நகை நீ கேளாய் தோழி! அல்கல்; |
|
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ, |
|
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு |
|
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து, |
|
5 |
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற |
தறுகட் பன்றி நோக்கி, கானவன் |
|
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி |
|
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது, |
|
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என, |
|
10 |
எய்யாது பெயரும் குன்ற நாடன் |
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து, |
|
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை, |
|
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர, |
|
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை; |
|
15 |
வல்லே என் முகம் நோக்கி, |
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
கான மான் அதர் யானையும் வழங்கும்; |
|
வான மீமிசை உருமும் நனி உரறும்; |
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; |
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி |
|
5 |
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் |
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், |
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! |
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ |
|
இன்று தலையாக வாரல்; வரினே, |
|
10 |
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, |
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் |
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, |
|
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு |
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் |
|
15 |
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! |
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல் |
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, |
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும் |
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப, |
|
5 |
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் |
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை, |
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் |
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை, |
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை |
|
10 |
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, |
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து, |
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் |
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார் |
|
முனை அரண் கடந்த வினை வல் தானை, |
|
15 |
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய |
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல, |
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து, |
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண, |
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை |
|
20 |
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் |
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
|
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
|
10 |
'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
|
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
|
20 |
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
|
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் | |
உரை |
மேல் |