பல்லி |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
|
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
|
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, |
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
|
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து |
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, |
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, |
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது |
|
5 |
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு |
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் |
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த |
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் |
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் |
|
10 |
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் |
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், |
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு |
|
உறுவது கூறும், சிறு செந் நாவின் |
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல் |
|
15 |
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் | |
உரை |
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் |
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் |
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் |
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், |
|
5 |
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், |
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, |
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது |
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி |
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த |
|
10 |
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, |
மை அற விரிந்த படை அமை சேக்கை |
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, |
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் |
|
15 |
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, |
'நல்ல கூறு' என நடுங்கி, |
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி, |
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப, |
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு |
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் |
|
5 |
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, |
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை, |
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில், |
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம், |
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய |
|
10 |
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, |
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண் |
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப, |
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி, |
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை, |
|
15 |
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என |
உள்ளுதொறு படூஉம் பல்லி, |
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே? |
|
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய், |
|
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்! |
|
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ |
|
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு |
|
5 |
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் |
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய |
|
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல், |
|
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப் |
|
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ, |
|
10 |
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை |
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட் |
|
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண், |
|
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி, |
|
நல் இசை நிறுத்த நாணுடை மறவர் |
|
15 |
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, |
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி |
|
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய |
|
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும், |
|
நின்றாங்குப் பெயரும் கானம் |
|
20 |
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே. |
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |