பாம்பு(அரா, அரவு, நாகம்) |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
உரை |
களையும் இடனால் பாக! உளை அணி |
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா |
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, |
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, |
|
5 |
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, |
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல |
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், |
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, |
|
10 |
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, |
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
15 |
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
புலம்பு கொள் மாலை கேட்டொறும் |
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் | |
உரை |
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் |
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், |
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் |
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, |
|
5 |
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை |
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், |
|
ஆறே அரு மரபினவே; யாறே |
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; |
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, |
|
10 |
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, |
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், |
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, |
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை |
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த |
|
15 |
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் |
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, |
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, |
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக |
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த |
|
20 |
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் |
ஆனா அரும் படர் செய்த |
|
யானே, தோழி! தவறு உடையேனே. |
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் | |
உரை |
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
|
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
|
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப. யாழ் செத்து.
| |
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
|
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் |
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல் |
|
5 |
வாரல் வாழியர், ஐய! நேர் இறை |
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் |
|
காவல் கண்ணினம் தினையே; நாளை |
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் |
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், |
|
10 |
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, |
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் |
|
திருமணி விளக்கின் பெறுகுவை |
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் | |
உரை |
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
|
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
|
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
|
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
'கேளாய், எல்ல! தோழி! வேலன் |
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய |
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின், |
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு, |
|
5 |
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும் |
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என, |
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, |
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண் |
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை, |
|
10 |
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் |
வானக மீனின் விளங்கித் தோன்றும், |
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த் |
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின், |
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள், |
|
15 |
அணங்கு சால், அரிவையைக் காண்குவம் |
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே. |
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ....... | |
உரை |
'நுதலும் தோளும், திதலை அல்குலும், |
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட |
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி, |
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது, |
|
5 |
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, |
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, |
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள, |
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் |
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் |
|
10 |
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, |
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை, |
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, |
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு |
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, |
|
15 |
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள |
மறப் புலி உழந்த வசி படு சென்னி |
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி, |
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை |
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை, |
|
20 |
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? |
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
|
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, |
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
|
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
|
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
|
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் | |
உரை |
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் |
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை |
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, |
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி |
|
5 |
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, |
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன |
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, |
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் |
|
காமர் துணையொடு ஏமுற வதிய, |
|
10 |
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; |
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் |
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப |
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு |
|
நம் வயிற் புரிந்த கொள்கை |
|
15 |
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் | |
உரை |
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? |
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். |
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் |
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, |
|
5 |
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை |
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் |
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: |
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல |
|
10 |
வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி |
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி |
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், |
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, |
|
15 |
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் |
|
அரவச் சீறூர் காண, |
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் | |
உரை |
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, |
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, |
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் |
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி, |
|
5 |
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
வேட்டம் போகிய குறவன் காட்ட |
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, |
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! |
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து |
|
10 |
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், |
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், |
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய |
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, |
|
15 |
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் |
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும் |
|
பெரு வரை நண்ணிய சாரலானே. |
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர் | |
உரை |
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், |
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, |
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை |
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், |
|
5 |
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, |
|
சிறு பல் மின்மினி போல, பல உடன் |
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட! |
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், |
|
10 |
உத்தி அரவின் பைத் தலை துமிய, |
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, |
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, |
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி |
|
தேராது வரூஉம் நின்வயின் |
|
15 |
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
|
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
|
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
|
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
|
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி, |
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த |
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட் |
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய் |
|
5 |
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக் |
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து |
|
மாய இருள் அளை மாய் கல் போல, |
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும், |
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ, |
|
10 |
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி, |
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப் |
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து |
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக, |
|
காமம் கைம்மிக உறுதர, |
|
15 |
ஆனா அரு படர் தலைத்தந்தோயே! |
அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து, |
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம் |
|
பருவம் செய்த பானாட் கங்குல், |
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப, |
|
5 |
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, |
திண் கால் உறியன், பானையன், அதளன், |
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன், |
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப, |
|
10 |
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, |
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் |
|
தண் நறு புறவினதுவே நறு மலர் |
|
முல்லை சான்ற கற்பின் |
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே. |
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார் | |
உரை |
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என |
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் |
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், |
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, |
|
5 |
ஐய ஆக வெய்ய உயிரா, |
இரவும் எல்லையும் படர் அட வருந்தி, |
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, |
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, |
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, |
|
10 |
வருவர் வாழி, தோழி! பெரிய |
நிதியம் சொரிந்த நீவி போலப் |
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, |
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் |
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி, |
|
15 |
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, |
இல் வழிப் படூஉம் காக்கைக் |
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
கான மான் அதர் யானையும் வழங்கும்; |
|
வான மீமிசை உருமும் நனி உரறும்; |
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; |
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி |
|
5 |
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் |
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், |
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! |
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ |
|
இன்று தலையாக வாரல்; வரினே, |
|
10 |
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, |
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் |
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, |
|
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு |
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் |
|
15 |
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! |
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, |
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; |
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, |
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, |
|
5 |
பாம்பு எறி கோலின் தமியை வைகி, |
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் |
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், |
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் |
|
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், |
|
10
|
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் |
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், |
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப |
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, |
|
புகல் அரும், பொதியில் போலப் |
|
15 |
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! |
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் |
|
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் |
|
வருவர் என்பது வாய்வதாக, |
|
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் |
|
5 |
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் |
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, |
|
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! |
|
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, |
|
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து |
|
10 |
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் |
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு |
|
ஆலி அழி துளி தலைஇக் |
|
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே! |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார் | |
உரை |
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் |
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை |
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த |
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன, |
|
5 |
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் |
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் |
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால, |
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, |
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், |
|
10 |
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த |
வண்டு உண் நறு வீ துமித்த நேமி |
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், |
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, |
|
செல்லும், நெடுந்தகை தேரே |
|
15 |
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! |
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் | |
உரை |
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், |
|
நன்பகல் அமையமும் இரவும் போல, |
|
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, |
|
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் |
|
5 |
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, |
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! |
|
நீ செல வலித்தனை ஆயின். யாவதும்
| |
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் |
|
ஆவி அவ் வரி நீர் என நசைஇ, |
|
10 |
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, |
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் |
|
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் |
|
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், |
|
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, |
|
15 |
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை |
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் |
|
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், |
|
கோல் கழிபு இரங்கும் அதர, |
|
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே? |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் | |
உரை |
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் |
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, |
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, |
|
அரவின் பைந் தலை இடறி, பானாள் |
|
5 |
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, |
துனி கண் அகல அளைஇ, கங்குலின் |
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் |
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், |
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் |
|
10 |
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு |
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி |
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, |
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் |
|
15 |
சாரல் நாடன் சாயல் மார்பே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் |
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், |
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் |
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, |
|
5 |
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட |
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து |
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப, |
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, |
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, |
|
10 |
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; |
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு |
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் |
|
வாழ்தல் அன்ன காதல், |
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே! |
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார் | |
உரை |
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, |
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, |
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, |
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும் |
|
5 |
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம |
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் |
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் |
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, |
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே |
|
10 |
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; |
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, |
|
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் |
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! |
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் |
|
15 |
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; |
வடவர் தந்த வான் கேழ் வட்டம் |
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய |
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் |
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் |
|
20 |
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், |
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை |
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, |
|
முன்றில் தாழைத் தூங்கும் |
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? |
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
உரை |
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை |
|
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, |
|
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் |
|
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, |
|
5 |
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, |
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, |
|
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை |
|
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, |
|
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, |
|
10 |
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை |
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் |
|
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை |
|
கல் ஊர் பாம்பின் தோன்றும் |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே? |
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத் |
|
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே; |
|
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து, |
|
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய, |
|
5 |
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு |
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை |
|
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி, |
|
நசை தர வந்த நன்னராளன் |
|
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின், |
|
10 |
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; |
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச் |
|
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும், |
|
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் |
|
இலங்கு வெள் அருவி போலவும், |
|
15 |
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, |
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, |
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், |
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த |
|
5 |
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, |
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், |
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், |
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, |
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி |
|
10 |
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் |
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், |
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, |
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி |
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் |
|
15 |
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, |
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. |
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன |
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் |
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் |
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் |
|
5 |
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் |
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் |
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி |
|
10 |
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் |
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை |
|
குன்று புகு பாம்பின் தோன்றும், |
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
மேல் |