நீர்நாய் |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத் |
|
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும், |
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய், |
|
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல், |
|
5 |
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை, |
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே! |
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் |
|
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி, |
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை, |
|
10 |
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து, |
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், |
|
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை? |
|
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற் |
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ |
|
15 |
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, |
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் |
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து |
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் |
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே? |
|
பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார் | |
உரை |
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் |
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, |
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் |
|
5 |
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் |
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் |
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் |
|
காஞ்சி நீழல் குரவை அயரும் |
|
10 |
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
தேர் தர வந்த நேர் இழை மகளிர் |
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே |
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் |
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே; |
|
15 |
தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், |
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் |
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, |
|
என்னொடு திரியானாயின், வென் வேல் |
|
20 |
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, |
|
ஆரியர் படையின் உடைக, என் |
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
|
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் | |
உரை |
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து |
|
வாளை நாள் இரை தேரும் ஊர! |
|
நாணினென், பெரும! யானே பாணன் |
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி, |
|
5 |
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் |
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த |
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க் |
|
கணையன் நாணியாங்கு மறையினள் |
|
மெல்ல வந்து, நல்ல கூறி, |
|
10 |
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் |
சேரியேனே; அயல் இலாட்டியேன்; |
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத் |
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர, |
|
நுதலும் கூந்தலும் நீவி, |
|
15 |
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. |
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர் | |
உரை |
மேல் |