பூனை(வெருகு) |
பின்னொடு முடித்த மண்ணா முச்சி |
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; |
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு |
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, |
|
5 |
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், |
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர |
|
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, |
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் |
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி |
|
10 |
இருவேம் நம் படர் தீர வருவது |
காணிய வம்மோ காதல்அம் தோழி! |
|
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் |
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், |
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் |
|
15 |
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி |
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் |
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார் | |
உரை |
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும், |
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி, |
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக, |
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின் |
|
5 |
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, |
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, |
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், |
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து |
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன் |
|
10 |
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் |
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின், |
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில், |
|
எழுதியன்ன கொடி படு வெருகின் |
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை, |
|
15 |
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் |
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு |
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும் |
|
வெரு வரு கானம், நம்மொடு, |
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே? |
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, |
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, |
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, |
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, |
|
5 |
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் |
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, |
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை |
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
10 |
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன |
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் |
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம |
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் |
|
15 |
உயிர் குழைப்பன்ன சாயல், |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன |
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் |
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் |
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் |
|
5 |
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் |
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் |
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி |
|
10 |
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் |
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை |
|
குன்று புகு பாம்பின் தோன்றும், |
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
மேல் |