முதலை(கராம்) |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
உரை |
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, |
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, |
|
மராஅ யானை மதம் தப ஒற்றி, |
|
5 |
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் |
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, |
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து |
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! |
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், |
|
10 |
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் |
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் |
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், |
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் |
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, |
|
15 |
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், |
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை |
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய் |
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே. |
|
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர் | |
உரை |
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் |
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், |
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் |
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, |
|
5 |
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை |
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், |
|
ஆறே அரு மரபினவே; யாறே |
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; |
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, |
|
10 |
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, |
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், |
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, |
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை |
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த |
|
15 |
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் |
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, |
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, |
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக |
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த |
|
20 |
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் |
ஆனா அரும் படர் செய்த |
|
யானே, தோழி! தவறு உடையேனே. |
|
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் | |
உரை |
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் |
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் |
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! |
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை |
|
5 |
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். |
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை |
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் |
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, |
|
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, | |
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் |
|
தண் நறும் பைந் தாது உறைக்கும் |
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் | |
உரை |
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, |
|
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் |
|
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி! |
|
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் |
|
5 |
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, |
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன |
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, |
|
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, |
|
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, |
|
10 |
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, |
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி |
|
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, |
|
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் |
|
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, |
|
15 |
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, |
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் |
|
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, |
|
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் |
|
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, |
|
20 |
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு |
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, |
|
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், |
|
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த |
|
புன் தலை மன்றம் காணின், வழி நாள், |
|
25 |
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; |
அதுவே மருவினம், மாலை; அதனால், |
|
காதலர் செய்த காதல் |
|
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார் | |
உரை |
மேல் |