மூதாய்(செம்மூதாய்) |
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், |
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி |
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, |
|
5 |
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் |
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் |
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், |
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு |
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம் |
|
10 |
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, |
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க, |
|
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, |
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, |
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன |
|
15 |
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, |
இனிய ஆகுக தணிந்தே |
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. |
|
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி, |
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு, |
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ, |
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி, |
|
5 |
தாழ்ந்த போல நனி அணி வந்து, |
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, |
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர் |
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன |
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல |
|
10 |
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, |
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில், |
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி, |
|
மணி மண்டு பவளம் போல, காயா |
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய, |
|
15 |
கார் கவின் கொண்ட காமர் காலை, |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே! |
|
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
மேல் |