அன்னம்(எகினம்) |
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் |
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், |
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன |
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை |
|
5 |
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, |
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, |
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் |
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, |
|
10 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி |
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம் |
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், |
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, |
|
15 |
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, |
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
|
மழலை இன் சொல் பயிற்றும் |
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, |
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், |
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் |
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, |
|
5 |
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய |
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, |
|
கால் என மருள, ஏறி, நூல் இயல் |
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் |
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! |
|
10 |
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை |
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, |
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி |
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, |
|
எல்லை போகிய புல்லென் மாலை, |
|
15 |
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், |
கழி படர் உழந்த பனி வார் உண்கண் |
|
நல் நிறம் பரந்த பசலையள் |
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார் | |
உரை |
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், |
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ, |
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல |
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய |
|
5 |
மென் முலை முற்றம் கடவாதோர்' என, |
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து |
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி |
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும் |
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை |
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் |
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு |
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் |
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை |
|
15 |
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி, |
கையறு நெஞ்சினள், அடைதரும் |
|
மை ஈர் ஓதி மாஅயோளே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் | |
உரை |
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, |
|
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், |
|
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், |
|
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் |
|
5 |
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! |
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் |
|
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், |
|
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் |
|
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், |
|
10 |
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை |
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
|
வண்டற் பாவை சிதைய வந்து, நீ |
|
தோள் புதிது உண்ட ஞான்றை, |
|
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே? |
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய |
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, |
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! |
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு |
|
5 |
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, |
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, |
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் |
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, |
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் |
|
10 |
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, |
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் |
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, |
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, |
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, |
|
15 |
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் |
பொலிவன அமர்த்த உண்கண், |
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் | |
உரை |
மேல் |