குருகு(நாரை) |
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
|
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
|
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
|
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
|
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
|
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
|
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
|
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் | |
உரை |
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், |
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, |
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், |
|
விளி முறை அறியா வேய் கரி கானம், |
|
5 |
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் |
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் |
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, |
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு |
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக் |
|
10 |
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் |
பொருது புண் நாணிய சேரலாதன் |
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, |
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் |
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், |
|
15 |
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் |
காதல் வேண்டி, எற் துறந்து |
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே. |
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் | |
உரை |
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
|
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
|
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் | |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
|
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
|
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
|
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
|
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
|
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
|
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
|
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் - பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், |
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி |
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, |
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் |
|
5 |
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, |
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் |
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, |
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து |
|
10 |
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, |
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, |
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு |
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் |
|
15 |
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி |
|
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் |
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் |
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என, |
|
20 |
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
முன் தான் கண்ட ஞான்றினு ம் |
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு |
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட, |
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே |
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே; |
|
5 |
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; |
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப் |
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த |
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள், |
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும், |
|
10 |
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை |
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி |
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, |
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில |
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர, |
|
15 |
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, |
ஆய்ந்த பரியன் வந்து, இவண் |
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! |
|
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார் | |
உரை |
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
|
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
|
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் |
|
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
|
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; |
|
நாண் இலை மன்ற யாணர் ஊர! |
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, |
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், |
|
5 |
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், |
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், |
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, |
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, |
|
10 |
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு |
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், |
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் |
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் |
|
15 |
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
போர் அடு தானைக் கட்டி |
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
|
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
|
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
|
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
|
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின், |
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ, |
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப, |
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம், |
|
5 |
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் |
அறியார்கொல்லோ, தாமே? அறியினும், |
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின், |
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ? |
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு |
|
10 |
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு |
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை |
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி, |
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை, |
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி, |
|
15 |
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் |
நில வரை எல்லாம் நிழற்றி, |
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே. |
|
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார் | |
உரை |
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த |
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் |
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் |
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல, |
|
5 |
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு |
ஆவது ஆக! இனி நாண் உண்டோ? |
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர! |
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண, |
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர் |
|
10 |
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, |
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் |
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று |
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல், |
|
பரந்து வெளிப்படாது ஆகி, |
|
15 |
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர் | |
உரை |
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் |
|
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், |
|
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க |
|
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை, |
|
5 |
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், |
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல் |
|
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி, |
|
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச் |
|
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து, |
|
10 |
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, |
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப் |
|
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால், |
|
சேணின் வருநர் போலப் பேணா, |
|
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின், |
|
15 |
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, |
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும் |
|
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே; |
|
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என, |
|
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, |
|
20 |
இளையரும் புரவியும் இன்புற, நீயும் |
இல் உறை நல் விருந்து அயர்தல் |
|
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை | |
உரை |
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
|
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
|
10 |
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
|
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
உரை |
மேல் |