குருவி |
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, |
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண் |
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், |
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் |
|
5 |
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், |
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் |
|
புலம் கந்தாக இரவலர் செலினே, |
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் |
|
10 |
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, |
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு |
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் |
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, |
|
15 |
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் |
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் |
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, |
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் |
|
20 |
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
|
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
|
10 |
'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
|
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
|
20 |
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
|
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் | |
உரை |
மேல் |