சிச்சிலி(சிரல்) |
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, |
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், |
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப் |
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் |
|
5 |
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை |
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது |
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின், |
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண் |
|
உலமந்து வருகம் சென்மோ தோழி! |
|
10 |
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் |
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் |
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே. |
|
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார் | |
உரை |
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, |
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; |
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, |
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, |
|
5 |
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த |
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் |
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! |
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும், |
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, |
|
10 |
அறனும் பொருளும் வழாமை நாடி, |
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் |
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; |
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், |
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை, |
|
15 |
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன |
பொய்யொடு மிடைந்தவை தோன்றின், |
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? |
|
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார் | |
உரை |
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் |
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை |
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த |
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன, |
|
5 |
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் |
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் |
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால, |
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, |
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், |
|
10 |
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த |
வண்டு உண் நறு வீ துமித்த நேமி |
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், |
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, |
|
செல்லும், நெடுந்தகை தேரே |
|
15 |
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! |
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் | |
உரை |
மேல் |