புறா |
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப |
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து |
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை |
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து, |
|
5 |
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி |
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து, |
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் |
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு, |
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின் |
|
10 |
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின், |
குறு நடைப் புறவின் செங் காற் சேவல் |
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும் |
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை, |
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி, |
|
15 |
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் |
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச் |
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் |
|
வேய் புரை பணைத் தோள், பாயும் |
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே. |
|
தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் |
|
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு |
|
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, |
|
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே |
|
5 |
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் |
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் |
|
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து |
|
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் |
|
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, |
|
10 |
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், |
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை |
|
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி |
|
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, |
|
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து |
|
15 |
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று |
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் |
|
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், |
|
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் |
|
கூர் முகச் சிதலை வேய்ந்த |
|
20 |
போர் மடி நல் இறைப் பொதியிலானே? |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
உரை |
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற் |
|
செம் முது செவிலியர் பல பாராட்ட, |
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி |
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ, |
|
5 |
மனை உறை புறவின் செங் காற் சேவல் |
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல, |
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் |
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை |
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல, |
|
10 |
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, |
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும், |
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி |
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப, |
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய, |
|
15 |
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென |
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் |
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான் |
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென, |
|
தார் மணி மா அறிவுறாஅ, |
|
20 |
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே! |
வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் |
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, |
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, |
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் |
|
5 |
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, |
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர் |
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் |
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம் |
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு |
10 |
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, |
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே, |
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் |
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் |
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் |
|
15 |
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், |
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின், |
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே? |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
உரை |
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, |
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, |
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, |
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் |
|
5 |
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, |
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து |
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை |
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, |
|
10 |
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த |
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை, |
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார் | |
உரை |
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், |
|
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, |
|
பகலும் கங்குலும் மயங்கி, பையென, |
|
பெயல் உறு மலரின் கண் பனி வார, |
|
5 |
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, |
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை |
|
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை |
|
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, |
|
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, |
|
10 |
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் |
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், |
|
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து |
|
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, |
|
இரும் புறாப் பெடையொடு பயிரும் |
|
15 |
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
மேல் |