இறால் |
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, |
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை |
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, |
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு |
|
5 |
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, |
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் |
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் |
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; |
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, |
|
10 |
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, |
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக் |
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் |
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த |
|
நாடு தரு நிதியினும் செறிய |
|
15 |
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. |
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, |
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் |
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் |
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி |
|
5 |
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் |
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! |
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து |
|
10 |
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே |
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், |
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, |
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், |
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, |
|
15 |
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, |
|
களிறு கவர் கம்பலை போல, |
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே. |
|
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
உண்ணாமையின் உயங்கிய மருங்கின் |
|
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல, |
|
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும் |
|
கான யானை கவின் அழி குன்றம் |
|
5 |
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த |
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி |
|
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு |
|
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என |
|
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் |
|
10 |
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் |
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை, |
|
இறவொடு வந்து கோதையொடு பெயரும் |
|
பெருங் கடல் ஓதம் போல, |
|
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
கானலும் கழறாது; கழியும் கூறாது; |
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; |
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; |
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் |
|
5 |
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, |
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே, |
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் |
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் |
|
10 |
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் |
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, |
|
'நின் உறு விழுமம் களைந்தோள் |
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
|
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | |
உரை |
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, |
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், |
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், |
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, |
|
5 |
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் |
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, |
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், |
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் |
|
காணலாகா மாண் எழில் ஆகம் |
|
10 |
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே |
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், |
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், |
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், |
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, |
|
15 |
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், |
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை |
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் |
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, |
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல் |
|
20 |
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் |
நல் எழில் சிதையா ஏமம் |
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், |
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து |
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் |
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; |
|
5 |
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை |
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் |
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, |
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான் |
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, |
|
10 |
அம் மா மேனி தொல் நலம் தொலைய, |
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே, |
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் |
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை |
|
இன்னாது உயங்கும் கங்குலும், |
|
15 |
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. |
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார் | |
உரை |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
உரை |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |