சுறா(கோட்டுமீன்) |
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, |
|
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, |
|
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, |
|
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப! |
|
5 |
நெய்தல் உண்கண் பைதல கலுழ, |
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும் |
|
அரிது உற்றனையால் பெரும! உரிதினின் |
|
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு |
|
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் |
|
10 |
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் |
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி, |
|
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் |
|
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. |
|
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார் | |
உரை |
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை, |
|
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து, |
|
துணை புணர் உவகையர் பரத மாக்கள் |
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி, |
|
5 |
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும் |
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ, |
|
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி, |
|
பெருங் களம் தொகுத்த உழவர் போல, |
|
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி, |
|
10 |
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, |
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ! |
|
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் |
|
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் |
|
தண் நறுங் கானல் வந்து, 'நும் |
|
15 |
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே? |
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் | |
உரை |
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் |
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் |
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! |
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை |
|
5 |
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். |
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை |
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் |
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, |
|
10 |
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, |
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் |
|
தண் நறும் பைந் தாது உறைக்கும் |
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் | |
உரை |
நெடு வேள் மார்பின் ஆரம் போல, |
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் |
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, |
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் |
|
5 |
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே |
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் |
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, |
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால் |
|
10 |
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, |
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை |
|
15 |
அன்றில் அகவும் ஆங்கண், |
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
|
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென |
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் |
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; |
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, |
|
5 |
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, |
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் |
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, |
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் |
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, |
|
10 |
மாலை மணி இதழ் கூம்ப, காலைக் |
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் |
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; |
|
'வாரார்கொல்?' எனப் பருவரும் |
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார் | |
உரை |
கானலும் கழறாது; கழியும் கூறாது; |
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; |
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; |
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் |
|
5 |
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, |
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே, |
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் |
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் |
|
10 |
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் |
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, |
|
'நின் உறு விழுமம் களைந்தோள் |
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
|
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு |
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட, |
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே |
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே; |
|
5 |
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; |
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப் |
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த |
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள், |
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும், |
|
10 |
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை |
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி |
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, |
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில |
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர, |
|
15 |
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, |
ஆய்ந்த பரியன் வந்து, இவண் |
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! |
|
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார் | |
உரை |
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, |
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, |
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, |
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும் |
|
5 |
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம |
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் |
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் |
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, |
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே |
|
10 |
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; |
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, |
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! |
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் |
|
15 |
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; |
வடவர் தந்த வான் கேழ் வட்டம் |
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய |
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் |
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் |
|
20 |
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், |
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை |
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, |
|
முன்றில் தாழைத் தூங்கும் |
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? |
|
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, |
|
எறி திரை ஓதம் தரல் ஆனாதே; |
|
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் |
|
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப, |
|
5 |
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; |
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி |
|
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது, |
|
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் |
|
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப! |
|
10 |
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, |
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் |
|
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, |
|
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் |
|
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், |
|
15 |
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார் | |
உரை |
மேல் |