'தொடு தோல்' என்று செருப்பு குறிப்பிடப்பட்டுள்ளது |
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் |
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், |
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன |
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை |
|
5 |
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, |
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, |
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் |
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, |
|
10 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி |
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம் |
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், |
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, |
|
15 |
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, |
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
|
மழலை இன் சொல் பயிற்றும் |
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! 'இம்மை |
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் |
|
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? |
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த |
|
5 |
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் |
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் |
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, |
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து |
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி, |
|
10 |
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், |
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, |
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, |
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று |
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, |
|
15 |
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், |
தண் கார் ஆலியின், தாவன உதிரும் |
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு |
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே! |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் |
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |