34. முல்லை |
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் |
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், |
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன |
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை |
|
5 |
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, |
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, |
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் |
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, |
|
10 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி |
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம் |
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், |
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, |
|
15 |
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, |
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
|
மழலை இன் சொல் பயிற்றும் |
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |