77. பாலை |
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், |
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப் |
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் |
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற |
|
5 |
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் |
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், |
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், |
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், |
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த |
|
10 |
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, |
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் |
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் |
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல் |
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, |
|
15 |
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, |
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் |
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த |
|
திருந்துஇலை எஃகம் போல, |
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே. |
|
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார் | |
உரை |
மேல் |