289. பாலை |
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் |
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் |
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் |
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், |
|
5 |
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், |
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, |
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது |
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி |
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த |
|
10 |
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, |
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப, |
|
மை அற விரிந்த படை அமை சேக்கை |
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, |
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் |
|
15 |
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, |
'நல்ல கூறு' என நடுங்கி, |
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
மேல் |