நெய்தல் |
|
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
|
|
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
|
|
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
|
|
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
|
5
|
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
|
|
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
|
|
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
|
|
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்
கொண்டலொடு
|
|
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
|
10
|
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
|
|
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
|
|
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
|
|
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
|
இரவுக்குறி வந்து தலைமகளைக்
கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
|
|
|
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
|
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
|
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
|
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
|
5
|
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங்
கழித்
|
|
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
|
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
|
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
|
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
|
10
|
பல் பூங் கானல் அல்கினம் வருதல்
|
|
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
|
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
|
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,
|
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
|
15
|
வலவன் ஆய்ந்த வண் பரி
|
|
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.
|
பகற்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச்
சொல்லியது. - உலோச்சனார்
|
|
|
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
|
|
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
|
|
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
|
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
|
5
|
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
|
|
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
|
|
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
|
|
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
|
|
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
|
10
|
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
|
|
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
|
|
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
|
|
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
|
|
தண் நறுங் கானல் வந்து, 'நும்
|
15
|
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?
|
பகற்குறி வந்த தலைமகற்குத்
தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த
நெடுஞ்சேரலாதன்
|
|
|
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
|
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
|
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
|
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
|
5
|
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை,
|
|
தாழை தளரத் தூக்கி, மாலை
|
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
|
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
|
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
|
10
|
அறாஅலியரோ அவருடைக் கேண்மை!
|
|
அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
|
|
வாரற்கதில்ல தோழி! கழனி
|
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
|
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
|
15
|
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை
|
|
அகமடல் சேக்கும் துறைவன்
|
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச்
சொல்லியது.- குன்றியனார்
|
|
|
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
|
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
|
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
|
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
|
5
|
பகலும் நம்வயின் அகலானாகிப்
|
|
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச்
சேர்ப்பன்,
|
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
|
|
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
|
|
மல்லல் மூதூர் மறையினை சென்று,
|
10
|
சொல்லின் எவனோ பாண! 'எல்லி
|
|
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
|
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
|
|
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
|
|
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.
|
தோழி பாணனுக்குச்
சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
|
|
|
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
|
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ்
வலை
|
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
|
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
|
5
|
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
|
|
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
|
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
|
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
|
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
|
10
|
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
|
|
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
|
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
|
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
|
|
நாடு தரு நிதியினும் செறிய
|
15
|
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
|
தலைமகற்குத் தோழி
செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
கொடுந் திமிற் பரதவர் வேட்டம்
வாய்த்தென,
|
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
|
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
|
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
|
5
|
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
|
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
|
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
|
|
வதுவை கூடிய பின்றை, புதுவது
|
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
|
10
|
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
|
|
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
|
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
|
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
|
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
|
15
|
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
|
|
பல் வீழ் ஆலம் போல,
|
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
|
தலைமகன் வரைவு மலிந்தமை
தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத்
தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
|
|
|
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன்
வழங்கும்
|
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
|
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
|
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
|
5
|
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
|
|
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
|
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
|
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
|
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
|
10
|
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
|
|
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ்
பொன்
|
|
தண் நறும் பைந் தாது உறைக்கும்
|
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.
|
இரவுக்குறி வந்த
தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர்
கிழார் பெருங் கண்ணனார்
|
|
|
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
|
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
|
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
|
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
|
5
|
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்
|
|
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
|
|
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
|
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
|
10
|
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
|
|
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
|
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
|
|
'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
|
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.
|
பகற்குறி வந்து கண்ணுற்று
நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு
நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
|
அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
|
|
புரையப் பூண்ட கோதை மார்பினை,
|
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
|
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
|
5
|
பெருந் திரை முழக்கமொடு இயக்கு
அவிந்திருந்த
|
|
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
|
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண்
சுடர்
|
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
|
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
|
10
|
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்
|
|
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
|
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
|
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
|
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன
|
15
|
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்
|
|
வைகுறு விடியல் போகிய எருமை
|
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
|
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!
|
தோழி வரைவு கடாயது. -
உலோச்சனார்
|
|
|
அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
|
|
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
|
|
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
|
|
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
|
5
|
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல்
|
|
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
|
|
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
|
|
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
|
|
இருந்தனமாக, எய்த வந்து,
|
10
|
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே!
|
|
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
|
|
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும்
இக்
|
|
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'
|
|
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
|
15
|
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி,
|
|
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
|
|
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென.
|
|
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
|
|
காணாமோ?' எனக் காலின் சிதையா,
|
20
|
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்
|
|
என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்!
|
|
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
|
|
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன்
|
|
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
|
25
|
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே.
|
தோழி செவிலித்தாய்க்கு
அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார்
|
|
|
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
|
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
|
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
|
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
|
5
|
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு
|
|
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
|
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
|
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
|
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
|
10
|
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி
|
|
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
|
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
|
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
|
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
|
15
|
அன்றில் அகவும் ஆங்கண்,
|
|
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?
|
தோழி, பகற்குறிக்கண்
தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. -
நக்கீரனார்
|
|
|
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
|
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ
|
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை
|
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை,
|
5
|
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
|
|
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன்
|
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,
|
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
|
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்
|
10
|
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும்
|
|
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை
|
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்
|
|
போது புறங்கொடுத்த உண்கண்
|
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.
|
கழறிய பாங்கற்குத்
தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. -
வெண்கண்ணனார்
|
|
|
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
|
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
|
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
|
|
என்றூழ் விடர குன்றம் போகும்
|
5
|
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
|
|
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
|
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
|
|
சேரி விலைமாறு கூறலின், மனைய
|
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
|
10
|
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
|
|
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
|
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
|
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை
|
|
கை பூண் பகட்டின் வருந்தி,
|
15
|
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.
|
இயற்கைப் புணர்ச்சி
புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு
உரைத்தது.- அம்மூவனார்
|
|
|
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
|
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
|
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
|
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
|
5
|
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
|
|
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
|
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
|
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
|
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
|
10
|
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
|
|
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
|
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
|
|
'வாரார்கொல்?' எனப் பருவரும்
|
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!
|
பகற்குறி வந்து கண்ணுற்று
நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை
இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ,
வரைவு கடாயது. - குறுவழுதியார்
|
|
|
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
|
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல்
நெஞ்சம்.
|
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
|
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
|
5
|
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
|
|
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
|
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
|
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
|
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
|
10
|
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
|
|
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
|
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
|
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
|
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
|
15
|
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
|
|
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
|
|
அரவச் சீறூர் காண,
|
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.
|
தோழி வரைவு மலிந்து
சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்
|
|
உரை |
|
கானலும் கழறாது; கழியும் கூறாது;
|
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும்
மொழியாது;
|
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
|
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
|
5
|
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
|
|
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
|
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
|
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
|
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
|
10
|
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
|
|
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி
பரப்பின்
|
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
|
|
'நின் உறு விழுமம் களைந்தோள்
|
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.
|
தலைமகள் காமம் மிக்க
கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக்
கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
|
|
|
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
|
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
|
|
வீ ததை கானல் வண்டல் அயர,
|
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
|
5
|
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை
|
|
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
|
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
|
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
|
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
|
10
|
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன்
|
|
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
|
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
|
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப்
|
|
பொன் நேர் நுண் தாது நோக்கி,
|
15
|
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.
|
இரந்து பின்னின்ற
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி
தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க்
கண்ணம்பாளனார்
|
|
|
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
|
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட,
|
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
|
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
|
|
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்;
|
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
|
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
|
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
|
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
|
10
|
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை
|
|
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
|
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
|
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
|
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
|
15
|
இழுமென் கானல் விழு மணல் அசைஇ,
|
|
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
|
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!
|
தோழி செவிலித்தாய்க்கு
அறத்தொடு நின்றது. - உலோச்சனார்
|
|
|
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
|
|
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,
|
|
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
|
|
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம்
|
5
|
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்,
|
|
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
|
|
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
|
|
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
|
|
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
|
10
|
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற,
|
|
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
|
|
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும்
|
|
எம் வரை அளவையின் பெட்குவம்;
|
|
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.
|
தலைமகள் குறிப்பு அறிந்த
தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்
|
|
|
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
|
|
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்
|
|
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
|
|
விசும்பு அணி வில்லின் போகி, பசும்
பிசிர்த்
|
5
|
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து,
|
|
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
|
|
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி,
|
|
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க்
|
|
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி,
|
10
|
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன்
|
|
சாயல் மார்பின் பாயல் மாற்றி,
|
|
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச்
|
|
செலவு அரிது என்னும்' என்பது
|
|
பல கேட்டனமால் தோழி! நாமே.
|
தோழி தலைமகன்
சிறைப்புறமாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது. -
உலோச்சனார்
|
|
|
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,
|
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
|
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,
|
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,
|
5
|
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
|
|
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
|
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,
|
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்
|
|
காணலாகா மாண் எழில் ஆகம்
|
10
|
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே
|
|
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின்,
|
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்,
|
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்,
|
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து,
|
15
|
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,
|
|
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை
|
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
|
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து,
|
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல்
|
20
|
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள்
|
|
நல் எழில் சிதையா ஏமம்
|
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி
சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
|
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
|
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
|
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
|
5
|
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!
|
|
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
|
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
|
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
|
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
|
10
|
தீதும் உண்டோ, மாதராய்?' என,
|
|
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
|
|
கை வல் பாகன் பையென இயக்க,
|
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
|
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
|
15
|
சிறிய இறைஞ்சினள், தலையே
|
|
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
|
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்
|
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
|
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
|
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்
|
5
|
திரைச் சுரம் உழந்த திண் திமில்
விளக்கில்
|
|
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,
|
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
|
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
|
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
|
10
|
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி,
|
|
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,
|
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட
|
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,
|
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில்,
|
15
|
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.
|
தோழி இரவுக்குறி வந்த
தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. -
எழுஉப்பன்றி நாகன் குமரனார்
|
|
உரை |
|
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
|
|
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
|
|
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
|
|
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,
|
5
|
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட,
|
|
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
|
|
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
|
|
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
|
|
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்;
அதற்கொண்டு
|
10
|
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய்,
|
|
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி
|
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
|
|
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
|
|
துறையும் துஞ்சாது, கங்குலானே!
|
தலைமகற்குக் குறை நேர்ந்த
தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. -
செல்லூர் கிழார் மகனார்
பெரும்பூதங்கொற்றனார்
|
|
|
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர,
|
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
|
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப,
|
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப,
|
5
|
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய,
|
|
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில்
|
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர,
|
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில்
மனைப்
|
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ,
|
10
|
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற,
|
|
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது,
|
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
|
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள்,
|
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
|
15
|
அன்பிலாளன் அறிவு நயந்தேனே.
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறமாக, தோழியால் சொல்
எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. -
மோசிக் கரையனார்
|
|
|
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
|
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
|
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
|
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
|
5
|
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை
|
|
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
|
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
|
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
|
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
|
10
|
அம் மா மேனி தொல் நலம் தொலைய,
|
|
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
|
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
|
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
|
|
இன்னாது உயங்கும் கங்குலும்,
|
15
|
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே.
|
பகற்குறிக்கண் வந்து
நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார்
|
|
|
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
|
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
|
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
|
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
|
5
|
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை
கொடுப்பினும்,
|
|
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
|
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
|
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
|
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
|
10
|
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம்,
இருப்பின்,
|
|
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
|
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
|
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
|
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பட்டுப்
போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், -
அம்மூவனார்
|
|
|
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
|
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
|
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
|
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
|
5
|
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,
|
|
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
|
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
|
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச்
சேர்ப்பன்,
|
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
|
10
|
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
|
|
மணவா முன்னும் எவனோ தோழி!
|
|
வெண் கோட்டு யானை விறற் போர்க்
குட்டுவன்
|
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
|
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
|
15
|
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,
|
|
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. -
நக்கீரர்
|
|
உரை |
|
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
|
|
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
|
|
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
|
|
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,
|
5
|
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,
|
|
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்
|
|
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,
|
|
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'
எனச்
|
|
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,
|
10
|
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது,
|
|
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்
|
|
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
|
|
சேணின் வருநர் போலப் பேணா,
|
|
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,
|
15
|
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,
|
|
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
|
|
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;
|
|
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என,
|
|
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,
|
20
|
இளையரும் புரவியும் இன்புற, நீயும்
|
|
இல் உறை நல் விருந்து அயர்தல்
|
|
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.
|
பகற்குறி வந்து நீங்கும்
தலைமகற்குத் தோழி சொல்லியது. -
உலோச்சனார் மணி மிடை பவளம்
முற்றும்நித்திலக் கோவை
|
|
|
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
|
|
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
|
|
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
|
|
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
|
5
|
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு
|
|
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
|
|
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
|
|
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
|
|
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
|
10
|
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப!
|
|
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
|
|
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
|
|
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
|
|
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
|
15
|
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து
|
|
உரும் இசைப் புணரி உடைதரும்
|
|
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.
|
தலைமகற்குக் குறைநேர்ந்த
தோழி சொல்லியது. - நக்கீரனார்
|
|
|
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக்
கொளீஇ,
|
|
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன்,
|
|
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
|
|
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
|
5
|
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப!
|
|
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
|
|
அலர் வாய் நீங்க, நீ அருளாய்
பொய்ப்பினும்,
|
|
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம்
|
|
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்,
|
10
|
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை
|
|
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்
தேர்
|
|
வண்டற் பாவை சிதைய வந்து, நீ
|
|
தோள் புதிது உண்ட ஞான்றை,
|
|
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே?
|
பகற்குறிக்கண் வந்த
தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக்
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
|
|
உரை |
|
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும்,
|
|
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்,
|
|
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும்,
|
|
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர்
|
5
|
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு
|
|
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்!
|
|
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன்
நின்று,
|
|
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
|
|
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும்,
|
10
|
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ?
|
|
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;
|
|
குப்பை வெண் மணற் குவவுமிசையானும்,
|
|
எக்கர்த் தாழை மடல்வயினானும்,
|
|
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,
|
15
|
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த
|
|
கடுஞ் செலல் கொடுந் திமில் போல,
|
|
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!
|
தலைமகற்குக் குறை நேர்ந்த
தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்
|
|
உரை |
|
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
|
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல்
கழிப்பி,
|
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து,
|
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
|
5
|
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம
|
|
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
|
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்
|
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென,
|
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே
|
10
|
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்;
|
|
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என,
|
|
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண்
|
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப!
|
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
|
15
|
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;
|
|
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
|
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
|
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண்
திமில்
|
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப்
பரதவர்
|
20
|
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு
உடன்,
|
|
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
|
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு,
|
|
முன்றில் தாழைத் தூங்கும்
|
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன்,
ஊர்க்கே?
|
பகற் குறிக்கண் தோழி
தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்
|
|
உரை |
|
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
|
|
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
|
|
துறையே, மருங்கின் போகிய மாக் கவை
மருப்பின்
|
|
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
|
5
|
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே;
|
|
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
|
|
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
|
|
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
|
|
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
|
10
|
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,
|
|
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
|
|
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
|
|
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
|
|
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
|
15
|
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!
|
பகற்குறி வந்து நீங்கும்
தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன்
கண்ணனார்
|
|
உரை |
|
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி,
|
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
|
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித்
|
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
|
5
|
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப,
|
|
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
|
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
|
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
|
|
வந்த மாலை பெயரின், மற்று இவள்
|
10
|
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால்,
|
|
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
|
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
|
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக்
|
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
|
15
|
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!
|
|
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை
|
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என
|
|
நல் மலர் நறு வீ தாஅம்
|
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.
|
பகற்குறி வந்த தலைமகற்குத்
தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி
நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார்
|
|
உரை |
|
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,
|
|
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;
|
|
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
|
|
பகலே எம்மொடு ஆடி, இரவே,
|
5
|
காயல் வேய்ந்த தேயா நல் இல்
|
|
நோயொடு வைகுதிஆயின், நுந்தை
|
|
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ
|
|
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே,
|
|
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல்
|
10
|
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல்
|
|
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,
|
|
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,
|
|
நீயே கானல் ஒழிய, யானே
|
|
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி
துறந்து,
|
15
|
ஆடு மகள் போலப் பெயர்தல்
|
|
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே!
|
பகலே சிறைப்புறமாகத்
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. -அம்மூவனார்
|
|
உரை |
|
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும்
|
|
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி,
|
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை,
|
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
|
5
|
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன்,
|
|
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம்
|
|
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என,
|
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே;
|
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்;
|
10
|
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது
|
|
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்;
|
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ?
|
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே.
|
பின்னின்ற தலைமகற்குக்
குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை
நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
|
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
|
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
|
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
|
5
|
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,
|
|
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
|
|
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
|
|
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
|
|
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
|
10
|
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
|
|
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
|
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
|
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
|
|
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
|
15
|
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
|
|
சில் நிரை வால் வளைப் பொலிந்த
|
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!
|
தலைமகன் பாங்கற்குச்
சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம்
ஆம். - அம்மூவனார்
|
|
உரை |
|
நகை நன்று அம்ம தானே 'அவனொடு,
|
|
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து,
|
|
கானல் அல்கிய நம் களவு அகல,
|
|
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை,
|
5
|
நூல் அமை பிறப்பின், நீல உத்தி,
|
|
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப்
பெருகி,
|
|
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை
|
|
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந்
தினைக்
|
|
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு
|
10
|
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ,
|
|
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி,
|
|
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப்
|
|
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க்
|
|
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி,
|
15
|
பால் கண்டன்ன ஊதை வெண் மணல்,
|
|
கால் கண்டன்ன வழி படப் போகி,
|
|
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
|
|
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு
|
|
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை,
|
20
|
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு,
|
|
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
|
|
விளையா இளங் கள் நாற, பலவுடன்
|
|
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
|
|
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்,
|
25
|
பாடு எழுந்து இரங்கு முந்நீர்,
|
|
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே!
|
தலைமகன் வரைந்து எய்திய
பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார்
|
|
உரை |
மேல் |