முகப்பு | தொடக்கம் |
இளங் கண்டீரக்கோ |
151 |
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, |
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, |
|
புன் தலை மடப் பிடி பரிசிலாக, |
|
5 |
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் |
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் |
|
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் |
|
நன்னன் மருகன் அன்றியும், நீயும் |
|
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் |
|
10 |
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை |
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் |
|
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
|