![]() |
தொடக்கம் |
அரிசில் கிழார் |
146 |
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை |
|
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல |
|
நல் நாடு பாட, என்னை நயந்து |
|
5 |
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ |
நல்காமையின் நைவரச் சாஅய், |
|
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை |
|
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, |
|
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ, |
|
10 |
தண் கமழ் கோதை புனைய, |
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
|
230 |
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், |
|
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், |
|
களம் மலி குப்பை காப்பு இல வைகவும், |
|
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், |
|
5 |
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், |
பொய்யா எழினி பொருது களம் சேர |
|
ஈன்றோள் நீத்த குழவி போல, |
|
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, |
|
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு |
|
10 |
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி |
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! |
|
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், |
|
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு |
|
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், |
|
15 |
நேரார் பல் உயிர் பருகி, |
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே. |
|
திணை அது; துறை கையறு நிலை.
| |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
|
281 |
தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ, |
|
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க, |
|
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி, |
|
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, |
|
5 |
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி, |
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ, |
|
காக்கம் வம்மோ காதலம் தோழி! |
|
வேந்துறு விழுமம் தாங்கிய |
|
பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே. |
|
திணை காஞ்சி; துறை பேய்க்காஞ்சி.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
285 |
பாசறையீரே! பாசறையீரே! |
|
துடியன் கையது வேலே; அடி புணர் |
|
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப் |
|
பாணன் கையது தோலே; காண்வரக் |
|
5 |
கடுந் தெற்று மூடையின்...................... |
வாடிய மாலை மலைந்த சென்னியன்; |
|
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு |
|
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த |
|
மூரி வெண் தோல் |
|
10 |
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ! |
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக, |
|
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே; |
|
அது கண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து |
|
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர் |
|
15 |
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய, |
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் |
|
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே. |
|
திணை வாகை; துறை ...............முல்லை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
300 |
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு |
|
துறுகல் மறையினும் உய்குவை போலாய்; |
|
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி, |
|
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன், |
|
5 |
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு |
ஓர் இல் கோயில் தேருமால் நின்னே. |
|
திணை தும்பை; துறை தானை மறம்.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
304 |
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி, |
|
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி, |
|
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி |
|
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை, |
|
5 |
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு |
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி, |
|
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான் |
|
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, |
|
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் |
|
10 |
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று |
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
342 |
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் |
|
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், |
|
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, |
|
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! |
|
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; |
|
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை |
|
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், |
|
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, |
|
10 |
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் |
|
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், |
|
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, |
|
வாள் தக வைகலும் உழக்கும் |
|
15 |
மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|