முகப்பு | தொடக்கம் |
ஆவூர் மூலங் கிழார் |
38 |
வரை புரையும் மழ களிற்றின் மிசை, |
|
வான் துடைக்கும் வகைய போல, |
|
விரவு உருவின கொடி நுடங்கும் |
|
வியன் தானை விறல் வேந்தே! |
|
5 |
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, |
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, |
|
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், |
|
வெண் திங்களுள் வெயில் வேண்டினும், |
|
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், |
|
10 |
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, |
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் |
|
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் |
|
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, |
|
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் |
|
15 |
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, |
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், |
|
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் |
|
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
40 |
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் |
|
ஓம்பாது கடந்து அட்டு, அவர் |
|
முடி புனைந்த பசும் பொன் நின் |
|
அடி பொலியக் கழல் தைஇய |
|
5 |
வல்லாளனை; வய வேந்தே! |
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க, |
|
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, |
|
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் |
|
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும! |
|
10 |
ஒரு பிடி படியும் சீறிடம் |
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.
|
166 |
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை |
|
முது முதல்வன் வாய் போகாது, |
|
ஒன்று புரிந்த ஈர் இரண்டின், |
|
ஆறு உணர்ந்த ஒரு முது நூல் |
|
5 |
இகல் கண்டோர் மிகல் சாய்மார், |
மெய் அன்ன பொய் உணர்ந்து, |
|
பொய் ஓராது மெய் கொளீஇ, |
|
மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய |
|
உரைசால் சிறப்பின் உரவோர் மருக! |
|
10 |
வினைக்கு வேண்டி நீ பூண்ட |
புலப் புல்வாய்க் கலைப் பச்சை |
|
சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய; |
|
மறம் கடிந்த அருங் கற்பின், |
|
அறம் புகழ்ந்த வலை சூடி, |
|
15 |
சிறு நுதல், பேர் அகல் அல்குல், |
சில சொல்லின், பல கூந்தல், நின் |
|
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர் |
|
தமக்கு அமைந்த தொழில் கேட்ப; |
|
காடு என்றா நாடு என்று ஆங்கு |
|
20 |
ஈர் ஏழின் இடம் முட்டாது, |
நீர் நாண நெய் வழங்கியும், |
|
எண் நாணப் பல வேட்டும், |
|
மண் நாணப் புகழ் பரப்பியும், |
|
அருங் கடிப் பெருங் காலை, |
|
25 |
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை, |
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது |
|
பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின், |
|
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும் |
|
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண், |
|
30 |
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; |
செல்வல் அத்தை, யானே; செல்லாது, |
|
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக் |
|
கழை வளர் இமயம் போல, |
|
நிலீஇயர் அத்தை, நீ நிலம்மிசையானே? |
|
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
| |
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
177 |
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர், |
|
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி, |
|
பாடிப் பெற்ற பொன் அணி யானை, |
|
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின், |
|
5 |
திங்களும் நுழையா எந்திரப் படு புழை, |
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த |
|
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி, |
|
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் |
|
தீம் புளிக் களாவொடு துடரி முனையின், |
|
10 |
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி, |
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும், |
|
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு, |
|
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப் |
|
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை, |
|
15 |
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, |
இரும் பனங் குடையின் மிசையும் |
|
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
178 |
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து |
|
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண், |
|
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் |
|
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று, |
|
5 |
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் |
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார் |
|
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின், |
|
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய |
|
நெடுமொழி மறந்த சிறு பேராளர் |
|
10 |
அஞ்சி நீங்கும்காலை, |
ஏமமாகத் தான் முந்துறுமே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
| |
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.
|
196 |
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் |
|
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும், |
|
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; |
|
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது |
|
5 |
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே |
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் |
|
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை; |
|
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும் |
|
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால், |
|
10 |
நோய் இலராக நின் புதல்வர்; யானும், |
வெயில் என முனியேன், பனி என மடியேன், |
|
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை, |
|
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல் |
|
மெல் இயல் குறு மகள் உள்ளிச் |
|
15 |
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
261 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்! |
|
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
|
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், |
|
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் |
|
5 |
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், |
|
மையல் யானை அயாவுயிர்த்தன்ன |
|
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை |
|
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் |
|
10 |
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் |
|
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி, |
|
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை |
|
விரகு அறியாளர் மரபின் சூட்ட, |
|
15 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய |
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி, |
|
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய |
|
கழி கல மகடூஉப் போலப் |
|
புல்லென்றனையால், பல் அணி இழந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
301 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
குமரி மகளிர் கூந்தல் புரைய, |
|
அமரின் இட்ட அரு முள் வேலிக் |
|
கல்லென் பாசறைப் பல் சான்றீரே! |
|
5 |
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்; |
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்; |
|
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள் |
|
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர் |
|
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால் |
|
10 |
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே? |
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண் |
|
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி, |
|
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி, |
|
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென |
|
15 |
வேந்து ஊர் யானைக்கு அல்லது, |
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|