முகப்பு | தொடக்கம் |
இடைக்குன்றூர் கிழார் |
76 |
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், |
|
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; |
|
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை |
|
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் |
|
5 |
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, |
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, |
|
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி, |
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக, |
|
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன் |
|
10 |
பீடும் செம்மலும் அறியார் கூடி, |
'பொருதும்' என்று தன்தலை வந்த |
|
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, |
|
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.
|
77 |
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, |
|
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் |
|
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, |
|
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி, |
|
5 |
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் |
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு, |
|
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு |
|
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின் |
|
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை |
|
10 |
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை |
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ, |
|
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை |
|
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
78 |
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், |
|
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து, |
|
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன |
|
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து, |
|
5 |
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின் |
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என, |
|
எள்ளி வந்த வம்ப மள்ளர் |
|
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர, |
|
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர் |
|
10 |
மாண் இழை மகளிர் நாணினர் கழிய, |
தந்தை தம் ஊர் ஆங்கண், |
|
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
79 |
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, |
|
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து, |
|
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி, |
|
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த |
|
5 |
வம்ப மள்ளரோ பலரே; |
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|