முகப்பு | தொடக்கம் |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் |
27 |
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், |
|
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, |
|
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, |
|
வீற்றிருந்தோரை எண்ணும்காலை, |
|
5 |
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; |
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; |
|
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் |
|
வலவன் ஏவா வான ஊர்தி |
|
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் |
|
10 |
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! |
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், |
|
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், |
|
அறியாதோரையும் அறியக் காட்டி, |
|
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, |
|
15 |
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும், |
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, |
|
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் |
|
கொடாஅமை வல்லர் ஆகுக; |
|
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
28 |
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், |
|
கூனும், குறளும், ஊமும், செவிடும், |
|
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு |
|
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் |
|
5 |
பேதைமை அல்லது ஊதியம் இல்' என, |
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும், |
|
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது |
|
வட்ட வரிய செம் பொறிச் சேவல் |
|
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் |
|
10 |
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே, |
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் |
|
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் |
|
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் |
|
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; |
|
15 |
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் |
ஆற்றும், பெரும! நின் செல்வம்; |
|
ஆற்றாமை நிற் போற்றாமையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
29 |
அழல் புரிந்த அடர் தாமரை |
|
ஐது அடர்ந்த நூல் பெய்து, |
|
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் |
|
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, |
|
5 |
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் |
|
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க |
|
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, |
|
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், |
|
10 |
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, |
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் |
|
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! |
|
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் |
|
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, |
|
15 |
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் |
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு |
|
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் |
|
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, |
|
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் |
|
20 |
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை |
|
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் |
|
கோடியர் நீர்மை போல முறைமுறை |
|
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய |
|
25 |
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! |
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
30 |
செஞ் ஞாயிற்றுச் செலவும், |
|
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், |
|
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், |
|
வளி திரிதரு திசையும், |
|
5 |
வறிது நிலைஇய காயமும், என்று இவை |
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் |
|
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் |
|
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, |
|
களிறு கவுள் அடுத்த எறிகல் போல |
|
10 |
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட |
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு |
|
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது |
|
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் |
|
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் |
|
15 |
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
| |
அவனை அவர் பாடியது.
|
325 |
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், |
|
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, |
|
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், |
|
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் |
|
5 |
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் |
|
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் |
|
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், |
|
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் |
|
10 |
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், |
|
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் |
|
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் |
|
வேந்து தலைவரினும் தாங்கும், |
|
15 |
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|