முகப்பு | தொடக்கம் |
கணியன் பூங்குன்றனார் |
192 |
யாதும் ஊரே; யாவரும் கேளிர்; |
|
தீதும் நன்றும் பிறர் தர வாரா; |
|
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; |
|
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் |
|
5 |
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், |
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு |
|
வானம் தண் துளி தலை இ, ஆனாது |
|
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று |
|
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் |
|
10 |
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர் |
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் |
|
பெரியோரை வியத்தலும் இலமே; |
|
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கணியன் பூங்குன்றன் பாட்டு.
|