முகப்பு | தொடக்கம் |
கள்ளில் ஆத்திரையனார் |
175 |
எந்தை! வாழி; ஆதனுங்க! என் |
|
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே; |
|
நின் யான் மறப்பின், மறக்கும் காலை, |
|
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், |
|
5 |
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல் |
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர் |
|
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த |
|
உலக இடைகழி அறை வாய் நிலைஇய |
|
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும் |
|
10 |
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|
389 |
'நீர் நுங்கின் கண் வலிப்ப, |
|
கான வேம்பின் காய் திரங்க, |
|
கயம் களியும் கோடை ஆயினும், |
|
ஏலா வெண்பொன் போருறு காலை, |
|
5 |
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!' |
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை; |
|
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்; |
|
செலினே, காணா வழியனும் அல்லன்; |
|
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து, |
|
10 |
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் |
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன், |
|
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்! |
|
ஆதனுங்கன் போல, நீயும் |
|
பசித்த ஒக்கல் பழங்கண் வீட, |
|
15 |
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும! |
ஐது அகல் அல்குல் மகளிர் |
|
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|