முகப்பு | தொடக்கம் |
கூகைக் கோழியார் |
364 |
வாடா மாலை பாடினி அணிய, |
|
பாணன் சென்னிக் கேணி பூவா |
|
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க, |
|
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி, |
|
5 |
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை |
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப, |
|
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும், |
|
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே! |
|
அரியஆகலும் உரிய, பெரும! |
|
10 |
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் |
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும் |
|
கூகைக் கோழி ஆனாத் |
|
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
|