முகப்பு | தொடக்கம் |
கோப்பெரும் சோழன் |
214 |
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே |
|
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி |
|
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே; |
|
யானை வேட்டுவன் யானையும் பெறுமே; |
|
5 |
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: |
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு, |
|
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின், |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின், |
|
10 |
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; |
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக் |
|
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, |
|
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவன் வடக்கிருந்தான் சொற்றது.
|
215 |
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் |
|
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய |
|
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ, |
|
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை |
|
5 |
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் |
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் |
|
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே; |
|
செல்வக் காலை நிற்பினும், |
|
அல்லற் காலை நில்லலன்மன்னே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.
|
216 |
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் |
|
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, |
|
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், |
|
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, |
|
5 |
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! |
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; |
|
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; |
|
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர் |
|
பேதைச் சோழன்' என்னும், சிறந்த |
|
10 |
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை, |
இன்னது ஓர் காலை நில்லலன்; |
|
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.
|