முகப்பு | தொடக்கம் |
சிறுவெண்டேரையார் |
362 |
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த |
|
மதி உறழ் ஆரம் மார்பில் புரள, |
|
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப, |
|
பொழிலகம் பரந்த பெ................. |
|
5 |
.......................கும விசய வெண் கொடி |
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, |
|
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், |
|
ஆக் குரல் காண்பின் அந்தணாளர் |
|
நான்மறைக் குறி .......................... யின் |
|
10 |
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின் |
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ, |
|
கை பெய்த நீர் கடற் பரப்ப, |
|
ஆம் இருந்த அடை நல்கி, |
|
சோறு கொடுத்து, மிகப் பெரிதும் |
|
15 |
வீறு சான......................... நன்றும் |
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், |
|
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் |
|
பகலும் கூவும் அகலுள் ஆங்கண், |
|
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, |
|
20 |
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல |
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, |
|
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. |
|
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
| |
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
|