முகப்பு | தொடக்கம் |
தொடித்தலை விழுத்தண்டினார் |
243 |
இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல் |
|
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ, |
|
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, |
|
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி, |
|
5 |
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு |
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து, |
|
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக, |
|
கரையவர் மருள, திரைஅகம் பிதிர, |
|
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, |
|
10 |
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை |
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ |
|
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று, |
|
இரும் இடை மிடைந்த சில சொல் |
|
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே? |
|
திணையும் துறைஉம் அவை.
| |
தொடித் தலை விழுத்தண்டினார் பாடியது.
|