நெடுங்கழுத்துப் பரணர்

291
சிறாஅஅர்! துடியர்! பாடு வல் மகாஅஅர்!
தூ வெள் அறுவை மாயோற் குறுகி,
இரும் புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்;
5
என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை
மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே!

திணை அது; துறை வேத்தியல்.
நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.