முகப்பு | தொடக்கம் |
பரணர் |
4 |
வாள், வலம் தர, மறுப் பட்டன |
|
செவ் வானத்து வனப்புப் போன்றன; |
|
தாள், களம் கொள, கழல் பறைந்தன |
|
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; |
|
5 |
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, |
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; |
|
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, |
|
கறுழ் பொருத செவ் வாயான், |
|
எருத்து வவ்விய புலி போன்றன; |
|
10 |
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், |
நுதி மழுங்கிய வெண் கோட்டான், |
|
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; |
|
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் |
|
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, |
|
15 |
மாக் கடல் நிவந்து எழுதரும் |
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ |
|
அனையை ஆகன்மாறே, |
|
தாய் இல் தூவாக் குழவி போல, |
|
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
|
63 |
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, |
|
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; |
|
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் |
|
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; |
|
5 |
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், |
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; |
|
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், |
|
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; |
|
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, |
|
10 |
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, |
என் ஆவதுகொல்தானே கழனி |
|
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
|
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், |
|
யாணர் அறாஅ வைப்பின் |
|
15 |
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? |
திணையும் துறையும் அவை.
| |
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
|
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
142 |
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும், |
|
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும், |
|
வரையா மரபின் மாரிபோல, |
|
கடாஅ யானைக் கழல் கால் பேகன் |
|
5 |
கொடைமடம் படுதல் அல்லது, |
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
144 |
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர, |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின் |
|
கார் எதிர் கானம் பாடினேமாக, |
|
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் |
|
5 |
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, |
இனைதல் ஆனாளாக, 'இளையோய்! |
|
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என, |
|
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள் |
|
முகை புரை விரலின் கண்ணீர் துடையா, |
|
10 |
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி: |
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும், |
|
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன் |
|
ஒல்லென ஒலிக்கும் தேரொடு, |
|
முல்லை வேலி, நல் ஊரானே.' |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.
|
145 |
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, |
|
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, |
|
கடாஅ யானைக் கலி மான் பேக! |
|
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; |
|
5 |
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் |
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, |
|
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, |
|
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், |
|
இன மணி நெடுந் தேர் ஏறி, |
|
10 |
இன்னாது உறைவி அரும் படர் களைமே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
|
336 |
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே; |
|
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்; |
|
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் |
|
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த |
|
5 |
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; |
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, |
|
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்; |
|
அறன் இலள் மன்ற தானே விறல் மலை |
|
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் |
|
10 |
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் |
தகை வளர்த்து எடுத்த நகையொடு, |
|
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே. |
|
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
| |
பரணர் பாடியது.
|
341 |
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு |
|
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல், |
|
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, |
|
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் |
|
5 |
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும் |
.............................................. |
|
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு, |
|
மாற்றம் மாறான், மறலிய சினத்தன், |
|
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே; |
|
10 |
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல், |
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை |
|
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ |
|
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின், |
|
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு |
|
15 |
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் |
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் |
|
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல, |
|
பெருங் கவின் இழப்பது கொல்லோ, |
|
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
343 |
'மீன் நொடுத்து நெல் குவைஇ, |
|
மிசை அம்பியின் மனை மறுக்குந்து, |
|
மனைக் குவைஇய கறி மூடையால், |
|
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து; |
|
5 |
கலம் தந்த பொற் பரிசம் |
கழித் தோணியான், கரை சேர்க்குந்து; |
|
மலைத் தாரமும் கடல் தாரமும் |
|
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் |
|
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன் |
|
10 |
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, |
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும், |
|
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத் |
|
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர், |
|
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை |
|
15 |
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து |
இடை மதில் சேக்கும் புரிசை, |
|
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
348 |
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, |
|
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய, |
|
கள் அரிக்கும் குயம், சிறு சில் |
|
மீன் சீவும் பாண் சேரி, |
|
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, | |
குவளை உண்கண் இவளை, தாயே |
|
ஈனாளாயினள்ஆயின், ஆனாது |
|
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும், |
|
செந் நுதல் யானை பிணிப்ப, |
|
10 |
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே! |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ..............................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................. நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ெ.................. |
.............................................. யமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
354 |
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா |
|
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் |
|
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்; |
|
வயல் அமர் கழனி வாயில் பொய்கை, |
|
5 |
கயல் ஆர் நாரை உகைத்த வாளை |
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் |
|
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ |
|
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை, |
|
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை |
|
10 |
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே? |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
| |
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
|