முகப்பு | தொடக்கம் |
பெருங்குன்றூர் கிழார் |
147 |
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி, |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை, |
|
கார் வான் இன் உறை தமியள் கேளா, |
|
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் |
|
5 |
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை |
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல் |
|
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி, |
|
புது மலர் கஞல, இன்று பெயரின், |
|
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|
210 |
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது, |
|
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு, |
|
நும்மனோரும் மற்று இனையர் ஆயின், |
|
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; |
|
5 |
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி |
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின் |
|
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், |
|
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப் |
|
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என |
|
10 |
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் |
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை |
|
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்: |
|
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர் |
|
அருங் கடி முனை அரண் போலப் |
|
15 |
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|
211 |
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு |
|
அணங்குடை அரவின் அருந் தலை துமிய, |
|
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர, |
|
குன்று தூவ எறியும் அரவம் போல, |
|
5 |
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, |
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் |
|
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், |
|
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என, |
|
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் |
|
10 |
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள் |
கை உள்ளது போல் காட்டி, வழி நாள் |
|
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் |
|
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் |
|
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி, |
|
15 |
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் |
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் |
|
செல்வல் அத்தை, யானே வைகலும், |
|
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, |
|
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின், |
|
20 |
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து, |
முலைக்கோள் மறந்த புதல்வனொடு, |
|
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
266 |
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, |
|
கயம் களி முளியும் கோடைஆயினும், |
|
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல், |
|
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை |
|
5 |
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் |
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்! |
|
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! |
|
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், |
|
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல, |
|
10 |
வல்லே களைமதிஅத்தை உள்ளிய |
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை, |
|
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் |
|
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|
318 |
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, |
|
மயில்அம் சாயல் மாஅயோளொடு |
|
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே |
|
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், |
|
5 |
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் |
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, |
|
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் |
|
புன் புறப் பெடையொடு வதியும் |
|
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|