முகப்பு | தொடக்கம் |
பேய் மகள் இளவெயினி |
11 |
அரி மயிர்த் திரள் முன்கை, |
|
வால் இழை, மட மங்கையர் |
|
வரி மணல் புனை பாவைக்குக் |
|
குலவுச் சினைப் பூக் கொய்து, |
|
5 |
தண் பொருநைப் புனல் பாயும், |
விண் பொரு புகழ், விறல் வஞ்சி, |
|
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, |
|
வெப்பு உடைய அரண் கடந்து, |
|
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே; |
|
10 |
புறம் பெற்ற வய வேந்தன் |
மறம் பாடிய பாடினியும்மே, |
|
ஏர் உடைய விழுக் கழஞ்சின், |
|
சீர் உடைய இழை பெற்றிசினே; |
|
இழை பெற்ற பாடினிக்குக் |
|
15 |
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே, |
என ஆங்கு, |
|
ஒள் அழல் புரிந்த தாமரை |
|
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
| |
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.
|