முகப்பு | தொடக்கம் |
பொருந்தில் இளங்கீரனார் |
53 |
முதிர் வார் இப்பி முத்த வார் மணல், |
|
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து, |
|
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் |
|
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற |
|
5 |
களம் கொள் யானை, கடு மான், பொறைய! |
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; |
|
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை |
|
கைம்முற்றல, நின் புகழே, என்றும்; |
|
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து |
|
10 |
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது |
செறுத்த செய்யுள் செய் செந் நாவின், |
|
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் |
|
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் |
|
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, |
|
15 |
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.
|