மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

329
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி,
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய,
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்,
5
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.

திணையும் துறையும் அவை.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.