முகப்பு | தொடக்கம் |
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் |
350 |
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், |
|
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர் |
|
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது? |
|
படு மழை உருமின் இரங்கு முரசின் |
|
5 |
கடு மான் வேந்தர் காலை வந்து, எம் |
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ; |
|
பொருதாது அமைகுவர்அல்லர் போர் உழந்து, |
|
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய |
|
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், |
|
10 |
தொடி பிறழ் முன்கை, இளையோள் |
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.
|