மதுரைக் கணக்காயனார்

330
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர,
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி,
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன்மாதோ என்றும்
5
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மையோனே.

திணையும் துறையும் அவை.
மதுரைக் கணக்காயனார் பாடியது.