முகப்பு | தொடக்கம் |
ஆய் |
127 |
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
|
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென, |
|
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், |
|
கான மஞ்ஞை கணனொடு சேப்ப, |
|
5 |
ஈகை அரிய இழை அணி மகளிரொடு |
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்; |
|
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் |
|
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, |
|
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய |
|
10 |
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே. |
திணை அது; துறை கடைநிலை.
| |
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
128 |
மன்றப் பலவின் மாச் சினை மந்தி |
|
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் |
|
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின், |
|
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், |
|
5 |
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
ஆடுமகள் குறுகின் அல்லது, |
|
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே. |
|
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
129 |
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் |
|
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, |
|
வேங்கை முன்றில் குரவை அயரும், |
|
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் |
|
5 |
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் |
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, |
|
வானம் மீன் பல பூப்பின், ஆனாது |
|
ஒரு வழிக் கரு வழி இன்றிப் |
|
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
130 |
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு |
|
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ? |
|
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு, |
|
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த |
|
5 |
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் |
குட கடல் ஓட்டிய ஞான்றைத் |
|
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
131 |
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன், |
|
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன், |
|
குன்றம் பாடினகொல்லோ |
|
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
132 |
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! |
|
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே! |
|
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! |
|
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி |
|
5 |
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல |
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் |
|
வட திசையதுவே வான் தோய் இமயம். |
|
தென் திசை ஆஅய் குடி இன்றாயின், |
|
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
133 |
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின் |
|
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே; |
|
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின் |
|
விரை வளர் கூந்தல் வரை வளி உளர, |
|
5 |
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, |
மாரி அன்ன வண்மைத் |
|
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|
134 |
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும் |
|
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்; |
|
பிறரும் சான்றோர் சென்ற நெறி என, |
|
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
135 |
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, |
|
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, |
|
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், |
|
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, |
|
5 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, |
|
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் |
|
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, |
|
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
வந்தனென் எந்தை! யானே: என்றும், |
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு |
|
கறை அடி யானை இரியல் போக்கும் |
|
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! |
|
களிறும் அன்றே; மாவும் அன்றே; |
|
15 |
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; |
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், |
|
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் |
|
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, |
|
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் |
|
20 |
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் |
உறு முரண் கடந்த ஆற்றல் |
|
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடியது.
|
136 |
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப |
|
இழை வலந்த பல் துன்னத்து |
|
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ |
|
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த |
|
5 |
பேஎன் பகை என ஒன்று என்கோ? |
உண்ணாமையின் ஊன் வாடி, |
|
தெண் நீரின் கண் மல்கி, |
|
கசிவுற்ற என் பல் கிளையொடு |
|
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
10 |
அன்ன தன்மையும் அறிந்து ஈயார், |
'நின்னது தா' என, நிலை தளர, |
|
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், |
|
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் |
|
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
15 |
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' |
எனக் கருதி, பெயர் ஏத்தி, |
|
வாய் ஆர நின் இசை நம்பி, |
|
சுடர் சுட்ட சுரத்து ஏறி, |
|
இவண் வந்த பெரு நசையேம்; |
|
20 |
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; |
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என, |
|
அனைத்து உரைத்தனன் யான் ஆக, |
|
நினக்கு ஒத்தது நீ நாடி, |
|
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், |
|
25 |
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை |
நுண் பல மணலினும் ஏத்தி, |
|
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
|
240 |
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், |
|
வாடா யாணர் நாடும் ஊரும், |
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் |
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, |
|
5 |
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, |
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, |
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் |
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, |
|
10 |
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, |
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
|
வாடிய பசியராகி, பிறர் |
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
|
241 |
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், |
|
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி |
|
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், |
|
போர்ப்புறு முரசம் கறங்க, |
|
5 |
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|