முகப்பு | தொடக்கம் |
ஆய் அண்டிரன் |
129 |
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் |
|
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, |
|
வேங்கை முன்றில் குரவை அயரும், |
|
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் |
|
5 |
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் |
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, |
|
வானம் மீன் பல பூப்பின், ஆனாது |
|
ஒரு வழிக் கரு வழி இன்றிப் |
|
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
374 |
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் |
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன, |
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
5 |
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, |
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, |
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் |
|
10 |
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, |
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், |
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், |
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, |
|
15 |
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், |
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, |
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு! |
|
கொன் விளங்குதியால் விசும்பினானே! |
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
| |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
375 |
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி, |
|
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற் |
|
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக, |
|
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல் |
|
5 |
நாரும் போழும் கிணையொடு சுருக்கி, |
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, |
|
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் |
|
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப் |
|
பிரசம் தூங்கும் அறாஅ யாணர், |
|
10 |
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந! |
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்! |
|
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது, |
|
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும் |
|
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால் |
|
15 |
புலவர் புக்கில் ஆகி, நிலவரை |
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே |
|
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து, |
|
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி, |
|
பெரிய ஓதினும் சிறிய உணராப் |
|
20 |
பீடு இன்று பெருகிய திருவின், |
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் பாடியது.
|