முகப்பு | தொடக்கம் |
இருங் கோவேள் |
201 |
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, |
|
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் |
|
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, |
|
படு மணி யானை, பறம்பின் கோமான் |
|
5 |
நெடு மாப் பாரி மகளிர்; யானே |
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; |
|
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. |
|
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, |
|
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, |
|
10 |
உவரா ஈகை, துவரை ஆண்டு, |
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த |
|
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! |
|
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! |
|
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய |
|
15 |
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து |
|
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் |
|
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் |
|
உடலுநர் உட்கும் தானை, |
|
20 |
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
திணையும் துறையும் அவை.
| |
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|