முகப்பு | தொடக்கம் |
இள வெளிமான் |
207 |
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, |
|
பருகு அன்ன வேட்கை இல்வழி, |
|
அருகில் கண்டும் அறியார் போல, |
|
அகம் நக வாரா முகன் அழி பரிசில் |
|
5 |
தாள் இலாளர் வேளார் அல்லர்? |
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே |
|
பெரிதே உலகம்; பேணுநர் பலரே; |
|
மீளி முன்பின் ஆளி போல, |
|
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென |
|
10 |
நோவாதோன்வயின் திரங்கி, |
வாயா வன் கனிக்கு உலமருவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|