முகப்பு | தொடக்கம் |
கோப்பெருஞ்சோழன் |
67 |
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! |
|
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் |
|
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, |
|
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் |
|
5 |
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, |
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, |
|
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது |
|
சோழ நல் நாட்டுப் படினே, கோழி |
|
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, |
|
10 |
வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் |
|
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் |
|
இன்புறு பேடை அணிய, தன் |
|
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
212 |
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக் |
|
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் |
|
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா, |
|
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ, |
|
5 |
வைகு தொழில் மடியும் மடியா விழவின் |
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர் |
|
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி, |
|
கோழியோனே, கோப்பெருஞ்சோழன் |
|
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ, |
|
10 |
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
213 |
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள், |
|
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே! |
|
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து, |
|
நின்தலை வந்த இருவரை நினைப்பின், |
|
5 |
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர், |
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்; |
|
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு |
|
அனையை அல்லை; அடு மான் தோன்றல்! |
|
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ |
|
10 |
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும் |
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே: |
|
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும் |
|
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே! |
|
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த |
|
15 |
எண் இல் காட்சி இளையோர் தோற்பின், |
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? |
|
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், |
|
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே; |
|
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து |
|
20 |
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு |
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது |
|
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர் |
|
அரும் பெறல் உலகத்து ஆன்றவர் |
|
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் மக்கள்மேல் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.
|
219 |
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல், |
|
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள! |
|
புலவுதி மாதோ நீயே |
|
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.
|
222 |
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி, |
|
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த |
|
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என, |
|
என் இவண் ஒழித்த அன்பிலாள! |
|
5 |
எண்ணாது இருக்குவை அல்லை; |
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.
|
223 |
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி, |
|
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி, |
|
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும், |
|
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு |
|
5 |
இன் உயிர் விரும்பும் கிழமைத் |
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
|