முகப்பு | தொடக்கம் |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி |
16 |
வினை மாட்சிய விரை புரவியொடு, |
|
மழை உருவின தோல் பரப்பி, |
|
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் |
|
விளை வயல் கவர்பூட்டி, |
|
5 |
மனை மரம் விறகு ஆகக் |
கடி துறை நீர்க் களிறு படீஇ, |
|
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் |
|
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, |
|
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, |
|
10 |
துணை வேண்டாச் செரு வென்றி, |
புலவு வாள், புலர் சாந்தின், |
|
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! |
|
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், |
|
பனிப் பகன்றை, கனிப் பாகல், |
|
15 |
கரும்பு அல்லது காடு அறியாப் |
பெருந் தண் பணை பாழ் ஆக, |
|
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, |
|
நாம நல் அமர் செய்ய, |
|
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
|
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
|
125 |
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, |
|
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, |
|
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர |
|
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, |
|
5 |
நள்ளாதார் மிடல் சாய்த்த |
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. |
|
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு |
|
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; |
|
குன்றத்து அன்ன களிறு பெயர, |
|
10 |
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; |
'வெலீஇயோன் இவன்' என, |
|
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு |
|
விரைந்து வந்து, சமம் தாங்கிய, |
|
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், |
|
15 |
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் |
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, |
|
'தொலைஇயோன் இவன்' என, |
|
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு |
|
இருக்கை சான்ற உயர் மலைத் |
|
20 |
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
|
367 |
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் |
|
தமவேஆயினும் தம்மொடு செல்லா; |
|
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; |
|
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் |
|
5 |
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, |
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய |
|
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, |
|
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; |
|
10 |
வாழச் செய்த நல்வினை அல்லது |
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; |
|
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் |
|
முத்தீப் புரையக் காண்தக இருந்த |
|
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! |
|
15 |
யான் அறி அளவையோ இதுவே: வானத்து |
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் |
|
பரந்து இயங்கு மா மழை உறையினும், |
|
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
|
377 |
பனி பழுநிய பல் யாமத்துப் |
|
பாறு தலை மயிர் நனைய, |
|
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், |
|
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, |
|
5 |
'அவி உணவினோர் புறங்காப்ப, |
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, |
|
அதற் கொண்டு வரல் ஏத்தி, |
|
'''கரவு இல்லாக் கவி வண் கையான், |
|
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் |
|
10 |
பிறர்க்கு உவமம் தான் அல்லது, |
தனக்கு உவமம் பிறர் இல்' என, |
|
அது நினைந்து, மதி மழுகி, |
|
ஆங்கு நின்ற எற் காணூஉச் |
|
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! |
|
15 |
நீ புரவலை, எமக்கு' என்ன, |
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், |
|
கடல் பயந்த கதிர் முத்தமும், |
|
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், |
|
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, |
|
20 |
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; |
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; |
|
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; |
|
.........................பொற் கோட்டு யானையர், |
|
கவர் பரிக் கச்சை நல் மான், |
|
25 |
வடி மணி, வாங்கு உருள, |
.....................,..........நல் தேர்க் குழுவினர், |
|
கதழ் இசை வன்கணினர், |
|
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, |
|
கடல் ஒலி கொண்ட தானை |
|
30 |
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! |
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
|