முகப்பு | தொடக்கம் |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் |
58 |
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே, |
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் |
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு, |
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, |
|
5 |
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, |
இளையது ஆயினும் கிளை அரா எறியும் |
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் |
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, |
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, |
|
10 |
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, |
வரைய சாந்தமும், திரைய முத்தமும், |
|
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் |
|
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; |
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், |
|
15 |
நீல் நிற உருவின் நேமியோனும், என்று |
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, |
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, |
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? |
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே; |
|
20 |
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் |
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப் |
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் |
|
கையகப்படுவது பொய் ஆகாதே; |
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும், |
|
25 |
தொல்லோர் சென்ற நெறிய போலவும், |
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் |
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, |
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று |
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் |
|
30 |
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி |
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த |
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே. |
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
60 |
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, |
|
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
உச்சி நின்ற உவவு மதி கண்டு, |
|
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, |
|
5 |
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, |
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல் |
|
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் |
|
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் |
|
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன், |
|
10 |
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், |
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் |
|
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே? |
|
திணை அது; துறை குடை மங்கலம்.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
197 |
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு |
|
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, |
|
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு |
|
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, |
|
5 |
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு |
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, |
|
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் |
|
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; |
|
எம்மால் வியக்கப்படூஉமோரே, |
|
10 |
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த |
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, |
|
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், |
|
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் |
|
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; |
|
15 |
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; |
|
நல் அறிவு உடையோர் நல்குரவு |
|
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|