முகப்பு | தொடக்கம் |
தித்தன் |
80 |
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், |
|
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, |
|
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் |
|
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே |
|
5 |
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் |
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம |
|
பசித்துப் பணை முயலும் யானை போல, |
|
இரு தலை ஒசிய எற்றி, |
|
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. |
|
திணை தும்பை; துறை எருமை மறம்.
| |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
.................................................... நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ª.................. |
...................................................... யமரே. |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
358 |
பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம் |
|
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே; |
|
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு |
|
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின், |
|
5 |
கைவிட்டனரே காதலர்; அதனால் |
விட்டோரை விடாஅள், திருவே; |
|
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே. |
|
திணை அது; துறை மனையறம், துறவறம்.
| |
வான்மீகியார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
........................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|