முகப்பு | தொடக்கம் |
நெடுங்கிள்ளி |
44 |
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, |
|
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, |
|
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, |
|
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, |
|
5 |
அலமரல் யானை உரும் என முழங்கவும், |
பால் இல் குழவி அலறவும், மகளிர் |
|
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் |
|
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், |
|
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; |
|
10 |
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! |
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; |
|
மறவை ஆயின், போரொடு திறத்தல்; |
|
அறவையும் மறவையும் அல்லையாக, |
|
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் |
|
15 |
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் |
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|